நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நேற்று மாலை முதலே கடைகளுக்கு சென்று பூஜை பொருட்கள் மற்றும் களிமண்ணால் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலைகளை மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். பல்வேறு வடிவங்களில் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலைக்கு அலங்காரம் செய்து கொழுக்கட்டை, அவல், பொரி முதல் விநாயகருக்கு பிடித்த பொருட்களை வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
விநாயகர் கோயில்களில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மும்பையில் வைக்கப்பட்டு வித்தியாசமான பிரமாண்ட விநாயகர் சிலையை பார்க்க கூட்டம் கூடி வருகிறது.
Discussion about this post