மும்பையில் நடக்கும் ஒரு விநாயகர் கண்காட்சியில் உலகின் மிகப் பழமையான, 2000 ஆண்டுகளுக்கு முந்தைய விநாயகர் சிலை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி மிக விமரிசையாகக் கொண்டாடப்படும் இடமாக மும்பை உள்ளது. அங்கு 10 நாட்களுக்கு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.இதன் ஒரு அங்கமாக, மும்பையைச் சேர்ந்த பிரபல மருத்துவரான பிரகாஷ் கோத்தாரி தனது விநாயகர் தொடர்பான சேகரிப்புகளை மும்பையின் ‘ஜஹாங்கீர் ஆர்ட் கேலரி’யில் காட்சிக்கு வைத்துள்ளார்.
விநாயகர் வழிபாட்டோடு தொடர்புடைய பண்டைய சிலைகள், முத்திரைகள், நாணயங்கள், பணத்தாள்கள், நகைகள் – உள்ளிட்டவை இந்தக் கண்காட்சியில் இடம்பெற்று உள்ளன. இதுவரை உலகில் கண்டுபிடிக்கப்பட்ட விநாயகர் சிலைகளிலேயே மிகப் பழமையான 2000 ஆண்டுகளுக்கு முந்தைய விநாயகர் சிலையும், 1600 முதல் 2000 ஆண்டுகள் பழமையான விநாயகரின் களிமண் முத்திரையும் – இந்தக் கண்காட்சியின் முக்கிய அங்கங்கள் ஆகும்.
மேலும் பல்வேறு நூற்றாண்டுகளைச் சேர்ந்த விநாயகர் சிலைகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. இவை தவிர தாய்லாந்தில் கணபதிக்காக வெளியிடப்பட்ட நாணயம், பணத்தாள் போன்ற பல முக்கிய வரலாற்றுப் பொருட்களும் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
வீடியோவில் காண: https://www.youtube.com/watch?v=MrK_HvDw8-0
Discussion about this post