சைக்கிள் வாங்குவதற்காக, தான் சிறுக சிறுக உண்டியலில் சேமித்து வைத்த பணத்தை, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 வயது சிறுமி ஒருவர் நிவாரணமாக வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அடுத்த வி.களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் என்பவரின் 5 வயது மகள் ரித்திகா. இவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆயிரத்து 421 ரூபாயை, வழங்கியுள்ளார்.
சைக்கிள் வாங்குவதற்காக உண்டியலில் சேமித்து வைத்த அந்த தொகையை, பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமியிடம் வழங்கினார். சிறுமியின் இந்தச் செயலை மாவட்ட ஆட்சியர் வெகுவாக பாராட்டினார்.
Discussion about this post