தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிர்சேதம் இல்லாமல் தப்பித்ததாக நாகை மாவட்ட மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கஜா புயல் பாதிப்பு கடுமையானதாக இருந்தது என்றும், தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் புயல் பாதிப்பில் இருந்து தாங்கள் தப்பித்ததாக வடமழை மனக்காடு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியுள்ளனர்.
கஜா புயலின் வேகம் கடுமையாக இருந்ததாகவும், மரங்களை முறிக்கும் அளவுக்கு புயல் வீசியதாகவும் அவர்கள் தெரிவித்தனர். கூரை வீடுகளையும், ஓட்டு வீடுகளையும் கஜா சூறையாடியதாகவும், அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தாங்கள் உயிர் பிழைத்ததாக அவர்கள் கூறினர்.
Discussion about this post