இருபது நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளின் ஆளுநர்கள் அமைப்பு [Group of Twenty Finance Ministers and Central Bank Governors] என்பதன் சுருக்கமே ஜி20 ஆகும். இந்த கூட்டமைப்பு உலகப் பொருளாதாரத்தின் முதன்மைச் சிக்கல்களைக் கலந்துபேசி வளர்ச்சியடைந்த மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரங்களை ஒன்றிணைக்கும் முயற்சியினை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு 1999ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இக்கூட்டமைப்பின் முதல் உச்சிமாநாடு 2008ல் முதல்முறையாக நடைபெற்றது. அதை நடத்திய நாடு அமெரிக்கா. பின் வருடந்தோறும் உச்சிமாநாடுகள் நடைபெற்றது. 2009ல் இங்கிலாந்து, 2010ல் ஜுனில் கனடா நவம்பரில் தென்கொரியா, 2011ல் பிரான்சு, 2012ல் மெக்சிகோ, 2013ல் ரஷ்யா, 2014ல் ஆஸ்திரேலியா, 2015ல் துருக்கி, 2016ல் சீனா, 2017ல் ஜெர்மனி, 2018ல் அர்ஜெண்டினா, 2019ல் ஜப்பான், 2020 சவூதி அரேபியா, 2021ல் இத்தாலி, 2022ல் இந்தோனேசியா, 2023ல் தற்போது இந்தியாவில் நடைபெறப் போகிறது. அதற்காக இந்தியா வரும் வெளிநாட்டு விருந்தினர்கள் மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளப் போகிறார்கள். அதற்காக புதுச்சேரி அரசு பலத்த பாதுகாப்பினை மேற்கொண்டு வருகிறது. மேலும் அடுத்த ஆண்டு 2024ல் பிரேசிலில் இந்த மாநாடு நடைபெற இருக்கிறது.
ஜி20யின் உறுப்பு நாடுகள் பின்வருமாறு உள்ளன. 1.அர்ஜெண்டினா 2.ஆஸ்திரேலியா 3.பிரேசில் 4.கனடா 5.சீனா 6.பிரான்சு 7.ஜெர்மனி 8.இந்தியா 9.இந்தோனேசியா 10.இத்தாலி 11.ஜப்பான் 12.மெக்சிகோ 13. ரிபப்ளிக் ஆப் கொரியா 14.ரஷ்யா 15.சவூதி அரேபியா 16.தென் ஆப்ரிக்கா 17.துருக்கி 18.இங்கிலாந்து 19.அமெரிக்கா 20.ஐரோப்பிய ஒன்றியம். மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக வங்கதேசம், எகிப்து, மொரிஷியஸ், நெதர்லாந்து, நைஜீரியா, ஓமன், சிங்கப்பூர், ஸ்பெயின், யுஏஇ ஆகிய நாடுகள் கலந்து கொள்ளும்.
Discussion about this post