விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ.22.7 லட்சம் நிதியுதவி

விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு, சக காவலர்கள் இணைந்து 22 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

காவலர் பழனிகுமார் கடந்த 20ம் தேதி பணியை முடித்து செல்லும் போது எதிர்பாராதவிதமாக குப்பை லாரி மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தார். காவலர் பழனிகுமாருக்கு உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில் அவரின் குடும்பத்தினர் எந்த உதவியும் இன்றி தவித்து வந்தனர். இதனை அறிந்த சென்னை மாநகர காவலர்கள் பழனிகுமாரின் குடும்பத்தினருக்கு தங்களால் இயன்ற சிறிய தொகையை நிதியாக வழங்கினர்.

அவ்வாறு மொத்தமாக சேர்த்த ரூ.22,07,700 நிதியை தமிழக முதல்வர் இன்று உயிரிழந்த காவலர் பழனிகுமாரின் குடும்பத்தினருக்கு வழங்கினார். சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் உடனிருந்தார்.

Exit mobile version