மத்திய நிதி நிலை அறிக்கையில் சிகரெட் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு விலை குறைக்கப்பட்டுள்ளது. எந்தெந்த பொருட்களின் விலை அதிகரிக்கும்? எந்தெந்த பொருட்களின் விலை குறையும் என்பதை இப்போது காணலாம்.
மத்திய நிதி நிலை அறிக்கையில் இறக்குமதி செய்யப்படும் புத்தகங்களுக்கு 5 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது . மேலும் டிஜிட்டல் கேமரா, முந்திரி, பிவிசி, வினைல் புளோரிங், டைல்ஸ் மெட்டல் பிட்டிங்ஸ் ஆகியவற்றின் விலை உயரும். பர்னிச்சர், ஆட்டோ பார்ட்ஸ், சிந்தெடிக் ரப்பர், மார்பிள் சிலாப்ஸ், ஆப்டிகல் பைபர் பொருட்கள் விலை அதிகரிக்கும். சி.சி.டி.வி கேமராக்கள், டிஜிட்டல் மற்றும் நெட்வொர்க் வீடியோ ரெக்கார்டர்ஸ், சிகரெட்டுக்கும் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மத்திய நிதி நிலை அறிக்கை படி எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், எலக்ட்ரிக் பொருட்களின் விலை குறைய உள்ளது. வுட் ஃபைபர், பாதுகாப்பு சாதனங்கள் சில வகை மருத்துவ சாதனங்களின் விலையும் குறையும். எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு எலக்ட்ரிக் வாகன பொருட்களுக்கு வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது. அணுமின் உற்பத்தி தளம் அமைக்க தேவையான அனைத்து பொருட்களும் விலை குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post