ஆடி வெள்ளியை முன்னிட்டு மதுரை அருகே 1500 அடி உயரத்தில் இருக்கும் மடக்குளம் பசுமலையில் அமைந்துள்ள கபாலீஸ்வரி அம்மன் கோவிலில் மாபெரும் விளக்கு பூஜை நடைப்பெற்றது….
1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பலர் கலந்து கொண்டு கபாலிஸ்வரி அம்மனை வழிப்பட்டனர்…இந்த அம்மன் ஆனது ஆலமரத்தின் அடியில் கோவில் கொண்டு, தவக்கோலத்தில் எழுந்தருளி இருக்கிறார் அம்மன். லிங்கத்தின் மேல் அம்மன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க கூடியதால் கபாலீஸ்வரி என்று பெயர் பெற்றுள்ளது .
இயற்கை எழில் கொஞ்சும் மூலிகை செடிகளும் மரங்களும் நிறைந்த இந்த மலையில் 575 படிகள் ஏறி சென்று அம்மனை வழிப்பட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதிகம்…
Discussion about this post