தமிழ்நாடு அரசு, கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் வழங்கப்படும் கலைச்செம்மல் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு ஓவிய நுண்கலைக்குழு மூலமாக, மரபுவழி, நவீனபாணி கலைப்பிரிவுகளைச் சார்ந்த புகழ்பெற்ற ஓவியம், சிற்பக்கலை வல்லுநர்களுக்கு, அவரவர்கள் துறைகளில் புரிந்துவரும் சாதனைகளை பாராட்டும் வகையில், ஆண்டுதோறும் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது, 2013 ம் ஆண்டு முதல், 2018 ம் ஆண்டு வரையிலான கலைச்செம்மல் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, 2013-14 ம் ஆண்டு, நவீனபாணி பிரிவில் நந்தன் மற்றும் மரபுவழி பிரிவில் கணபதி ஸ்தபதிக்கும் விருது வழங்கப்படுகிறது. 2014-15 ம் ஆண்டுக்கு, நவீனபாணி பிரிவில் கோபிநாத் மற்றும் மரபுவழி பிரிவில் ராமஜெயத்திற்கும் வழங்கப்படுகிறது. 2015-16ஆம் ஆண்டுக்கான விருது, நவீனபாணி பிரிவில் அனந்தநாராயணன் நாகராஜனுக்கும், மரபுவழி பிரிவில் தமிழரசிக்கும் வழங்கப்படுகிறது. 2016-17ஆம் ஆண்டுக்கான விருது, நவீனபாணி பிரிவில் சி. டக்ளஸ் மற்றும் மரபுவழி பிரிவில் கீர்த்திவர்மனுக்கும் வழங்கப்படுகிறது.
2017-18ஆம் ஆண்டுக்கான கலைச்செம்மல் விருது, நவீனபாணி பிரிவில் ஜெயகுமார் மற்றும் மரபுவழி பிரிவில் கோபாலன் ஸ்தபதிக்கும் வழங்கப்படுகிறது. விருது பெறுவோர், 50 ஆயிரம் ரூபாய் விருதுத் தொகையும், செப்புப் பட்டயமும் வழங்கி கவுரவிக்கப்படுவார்கள்.
Discussion about this post