ஓசூரில், மத்திய அரசு பிளாஷ்டிக் பூக்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்ய தடைவிதிக்கக் கோரி ஒரு லட்சம் பூக்களை இலவசமாக வழங்கி விவசாயிகள் நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதிகளில் நல்லமண் வளம்,சீரான சீதோசன நிலை நிலவுவதால் ரோஜா,ஜர்புரா,பிங்க்,தாஜ்மஹால் உள்ளிட்ட ஏராளமான பூக்கள் உற்பத்தி செய்யப்பட்டு உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. நல்ல விலை கிடைத்து லாபமீட்டி வந்த விவசாயிகளுக்கு எதிராக சீன நாட்டு பிளாஷ்டிக் பூக்கள் இறக்குமதி செய்யப்படுவதால் 50% நஷ்டத்தை சந்தித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். எனவே சீன நாட்டு பூக்களை மத்திய அரசு தடைவிதிக்க வேண்டுமென
தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில்,ஓசூர் மலர்சாகுபடி விவசாயிகள் ஒருலட்சம் மலர்களை பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகளுக்கு இலவசமாக வழங்கினர்.
Discussion about this post