வெளிநாடுகளில் இருந்து 1 புள்ளி 2 லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தொடர் மழையால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை அதிகரித்து காணப்பட்டது. இதனை அடுத்து வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து சுமார் 1புள்ளி 2 லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் நிலவும் வெங்காயம் பற்றாக்குறையை சமாளிக்க முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Discussion about this post