ஊட்டியில் கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளை கவர புதுப்பெட்டிகளுடன் கூடிய மலை ரயில் 6ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை நீலகிரி மலை ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பயணிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர்.இந்நிலையில் கோடை சீசனை முன்னிட்டு ரயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மலை ரயிலில் பயன்படுத்த நவீன ரயில் பெட்டிகள் சென்னை, பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 4 நவீன ரயில்பெட்டிகள் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன. சோதனை ஓட்டம் முடிந்துள்ள நிலையில் வரும் 6ந் தேதி முதல் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை இயக்க இரயில்வே நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள்
மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Discussion about this post