பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை அஷ்லி பார்ட்டி (Ashleigh Barty) சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
பாரிசில் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் மகளிர் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை அஷ்லி பார்ட்டி (Ashleigh Barty) மற்றும் செக் குடியரசின் 19 வயது இளம் வீராங்கனையான மார்கெடா வோண்ருசோவா (Marketa Vondrousova) ஆகியோர் மோதினர். ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்திற்குப் பின் 6க்கு 1, 6க்கு 3 என்ற செட் கணக்கில் ஆஷ்லி பெய்ட்டி (Ashleigh Barty) வெற்றி பெற்றார். 46 ஆண்டுகளில் முதன்முறையாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவர் தற்போதுதான் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post