இந்தியாவில் சமீப காலமாக கிராமப்பகுதிகளில் கூட பீட்சா உள்ளிட்ட பல துரித உணவுக் கடைகள் அமைந்துள்ளதை நம்மால் காண இயலும். நம்மில் பாதிபேர் வெளி இடங்களுக்கு சென்றால் பீட்சா சாப்பிடாமல் வீடு திரும்புவதில்லை என்பது நிதர்சனமான உண்மை. ஆனால் வெளிநாட்டிலோ இந்த பீட்சாவை வைத்து விதவிதமாக கொண்டாடப்படுகிறது.
அமெரிக்காவின் சிகாகோவை சார்ந்த “சிகாகோ டவுன் பீட்சா” நிறுவனம் வித்தியாசமான ஐடியாவை அறிமுகப்படுத்தியுள்ளது. “பீட்சா பிரைடல் பேக்கேஜ்” எனப்படும் நிகழ்ச்சியில் திருமணமாக போகும் ஜோடிகளை பங்கேற்க வைத்து வெற்றிப்பெரும் ஜோடிக்கு இலவசமாக திருமணம் வைக்கிறது.
விஷயம் என்னவென்றால், மணப்பெண் அணியும் உடை, வெட்டப்படும் கேக், திருமணத்தின் உணவு என எல்லாமே பீட்சா மயம் தான்.
போட்டியில் ஒரு ஜோடி வெற்றி பெற்றது. அந்த மணப்பெண்ணுக்கு பெப்பரோனி வகை பீட்சாவை போல் உடையும், 3 அடுக்கு பீட்சா கேக், பீட்சா வடிவில் திருமண அறை, பீட்சா பூங்கொத்து வழங்கப்பட்டது. மேலும் ஹனிமூன் பேக்கேஜ்ஜோடு செலவுக்கு ரூ.45 ஆயிரம் என வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சீக்கிரம் இந்தியாவிலும் இந்த திட்டத்தை ஆரம்பிங்கப்பா…………..!
Discussion about this post