தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் கடலூரில் இதய நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் நகரில் உள்ள திருமண மண்டபத்தில் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவக்குழு மற்றும் சமூக அமைப்பு ஆகியவை இணைந்து இதயநோய்களுக்கான இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமில் இதயத்தை பாதுகாத்தல் குறித்த பல்வேறு ஆலோசனைகள், வழங்கப்பட்டது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்துகொண்டு இதய நோய் மருத்துவ பரிசோதனைகளை செய்துகொண்டனர்.
Discussion about this post