விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தனியார் கல்லூரி மற்றும் ரோட்டரி கிளப் சார்பில் அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்திய குழந்தைகளுக்கான இலவச இருதய சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் சாத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து பரிசோதனை செய்தனர். 210 க்கும் மேற்பட்ட குழந்தைகளை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்களில் 20 குழந்தைகளுக்கு தேவையான சிகிச்சைகள் கண்டறியப்பட்டு சென்னைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post