சென்னையில், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, ஐ.ஏ.எஸ் அதிகாரி போல் நடித்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் விஜயகுமார் என்பவர், தன்னை ஆளுநரின் தனிச் செயலாளர் எனக் கூறிக் கொண்டு 150 பேரிடம் 12 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு புகார்கள் வந்தன. புகார்களின் அடிப்படையில், விஜயகுமாரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், கைது செய்யப்பட்ட விஜயகுமார், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த டேனியல் ராஜ் என்பது தெரியவந்தது. மேலும், அவர், தன் பெயரை விஜயகுமார் என பொய் சொல்லி, கோடிக்கணக்கில் ஏமாற்றி வந்ததும் தெரியவந்தது.
Discussion about this post