1789-ம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சியின் போது பாஸ்டில் சிறை தகர்க்கப்பட்டதன் நினைவாக ஜூலை 14-ம் தேதி பிரான்சின் தேசிய தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது, பாஸ்டில் தினம் என்றும் அழைக்கப்படுகிறது. பாஸ்டில் என்றால் என்ன? அது எவ்வாறு உருவானது என்பதற்கான கேள்விகள் நமக்குல் தோன்ற ஆரம்பிக்கும். இந்த பாஸ்டில் சிறை பதினான்காம் நூற்றாண்டின் பாரிசை ஆங்கிலேயத்திற்கு எதிராக பாதுகாத்துக் கொள்ள கட்டப்பட்டது.
இந்த பாஸ்டில் சிறையானது சார்லஸ் ஆட்சியின் போது பயன்படுத்தபட்டது. மேலும், இதன் அமைப்பை பார்தால் ஐந்து அடி சுவர்கள் கொண்ட எட்டு வட்ட கோபுரங்களை கொண்டது. பாஸ்டில் எழுபது மூன்று அடி உயரம் கொண்டது. இந்த ஆண்டுடின் பாஸ்டில் தின அணிவகுப்பில் பங்கேற்க இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கலந்துக் கொள்ள உள்ளார். இந்த அணிவகுப்பில் இந்தியாவில் 72 விமான படை அதிகாரிகள், நான்கு ரஃபேல் விமானங்கள், 2சி-17 குளோப்மாஸ்டர் விமானங்கள் இந்தியாவின் முப்படைகளைச் சேர்ந்த 269 வீரர்கள் பிரெஞ்சு வீரர்களுடன் இணைந்து பங்கேற்க உள்ளனர். இந்த குழுவானது இன்று பிரான்ஸ் சென்றுள்ளது. மேலும் நாம் பார்த்தால், இந்தியா பிரான்ஸ் இடயேயான நட்புறவு முதாலம் உலகப்போருக்கு முந்தையது ஆகும். ஏனெனில், இந்த போரில் 13 லட்சத்துக்கும் அதிகமான இந்திய வீரர்கள் கலந்துகொண்டனர். இப்போரில் கலந்து கொண்டவர்களில் கிட்டத்தட்ட 74,000 பேர் சேற்றில் சிக்கி உயிரிழந்தனர். மேலும், 67 ஆயிரம் பேர் காயமடைந்தனர். பின்னர் இரண்டாம் உலகப்போரில் இந்திய வீரர்கள் இருபத்து ஐந்து பேர் பங்கேற்றனர்.
இந்த வகையில் இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையேயான ராணுவ உறவு என்பது இந்த ஆண்டு 25-வாது தேசிய தினமாகக் கொண்டாடப்படுகிறது. இரண்டு நாட்டு ராணுவ வீரர்களும் பயிற்சி பெற்றுத் தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். இந்திய ராணுவ குழுவிற்கு கேப்டனாக அமன் ஜக்தாப் தலைமை ஏற்று வருகிறார். மேலும் எழுபது ஏழு அணிவகுப்பு வீரர்கள் மற்றும் 38 இசைக்குழுக்களின் உறுப்பினர்களை கொண்டது தான் இந்த அணிவகுப்பு. இந்திய கடற்படைக் குழுவிற்கு கமாண்டர் விராட் பாகெலும், இந்திய விமானப் படைக்கு ஸ்க்வாட்ரன் தலைவர் சிந்து ரெட்டியும் தலைமை தாங்குகின்றனர். இதனிடையே நான்கு ரஃபேல் விமானபடைகள், இந்தியாவின் 72 விமான படை அதிகாரிகள், 2சி-17 குளோப்மாஸ்டர் விமானங்கள், இந்தியாவின் முப்படைகளை சேர்ந்த 269 வீரர்கள் பிரெஞ்ச் வீரர்களுடன் சேர்ந்து பங்கேற்க உள்ளது. இந்த அணிவகுப்பு இன்று பிரான்ஸ் சென்று உள்ளது.