கோவையில் கள்ளநோட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவை காந்தி பூங்கா பகுதியில் 100 ரூபாய் கள்ள நோட்டுகள் வைத்திருந்த பிரவீன் மற்றும் பூபதி ஆகிய இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 31 நூறு ரூபாய் கள்ளநோட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் மற்றொரு கும்பலும் கள்ள நோட்டு புழக்கத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து கள்ள நோட்டு புழக்கத்தில் ஈடுபட்ட தன்ராஜ், ரஞ்சித் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். தன்ராஜ் மற்றும் ரஞ்சித் ஆகியோரிடமிருந்து 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கள்ள நோட்டு அச்சடிக்கும் இயந்திரம், கணிப்பொறி ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட நான்கு பேரிடமும் கோவை ஆர்.எஸ் புரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post