நெல்லை அருகே, அரியவகை இரு தலை மணியன் பாம்பை கடத்தி விற்க முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அரியவகை மூலிகைகளும், அரியவகை விலங்கினங்களும், ஊர்வனவகைகளும் நிறைந்து காணப்படுகின்றன. இந்த நிலையில் அரிய வகை பாம்பான இருதலைமணியன் என்று அழைக்கப்படும் மண்ணுளி பாம்பு கடத்தப்படுவதாகவும், அதற்கு சில கும்பல்கள் உடந்தையாக இருப்பதாகவும், போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், குற்றாலம் அண்ணா சிலை பகுதியில், நான்கு பேர் இருதலை மணியன் பாம்பை சென்னைக்கு கடத்த இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த காவல்துறையினர், பாம்பை பறிமுதல் செய்து வனப்பகுதியில் விட்டனர்.
Discussion about this post