அச்சரப்பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் ராஜமன்னார்குடி பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர், சிங்கப்பூரில் இருந்து வந்த உறவினர்கள் மணிகண்டன், பத்மாவதி, திரிஷா ஆகியோரை காரில் அழைத்துக்கொண்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்றுக்கொண்டிருந்தார். காஞ்சிபுரம் சிறுநாகலூர் என்ற இடத்தில் சென்றுக்கொண்டிருந்தபோது கார் நிலைத்தடுமாறி எதிரே வந்த தனியார் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேல்மருவத்தூர் போலீசார், விபத்துக்குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.