சபரிமலை விவகாரத்தால் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகிய 4 நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இணையப்போவதாக அறிவித்துள்ளனர்.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பா.ஜனதா கட்சி சார்பிலும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது.
கேரள அரசு தலைமை செயலகம் முன்பு அந்த கட்சி சார்பில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது. இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த மாநில நிர்வாகிகள் கிருஷ்ணகுமார், ஜெயக்குமார், சுரேந்திரன், சுகுமாரன் ஆகியோர், அந்த கட்சியில் இருந்து விலகி உள்ளனர். இதனிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இணையப்போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
Discussion about this post