ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு, 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் ஊழல் தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது 3 ஊழல்கள் வழக்குகள் தொடரப்பட்டன. லண்டனில் சொத்து குவித்த வழக்கில் நவாசுக்கு, ஏற்கனவே 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரது மகள் மரியம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். மீதமுள்ள 2 ஊழல் வழக்குகளில் இஸ்லாமாபாத் ஊழல் தடுப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் அல் அஜிஜியா இரும்பு ஆலை வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
Discussion about this post