திருச்செந்தூரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், திமுக தலைவர் ரகுபதி என உளறியது, பொதுமக்களிடையே சிரிப்பலையை எழுப்பியது.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் கனிமொழியை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தொண்டர்கள் வராததால் ஏராளமான இருக்கைகள் காலியாக இருந்தன. மேலும் இதில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன், திமுக தலைவர் ரகுபதி என உளறினார். இதனால் பொதுக்கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது. அதேசமயம், திமுக தொண்டர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
Discussion about this post