சீனாவில் முன்னாள் மேயர் ஜாங் குய் வீட்டில் 13 டன் எடை கொண்ட தங்க கட்டிகள் மற்றும் நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சீனாவின் ஹாய்காவ் நகரின் மேயராக 2008 முதல் 2010 வரை இருந்தவர் ஜாங் குய் என்பவர் கம்யூனிஸ்டு கட்சி குழுவின்நகர செயலாளராகவும் இருந்து வந்தார். தனது பதவி காலத்தில் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக ஜாங் குய் மீது குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து அந்நாட்டின் ஊழல் தடுப்பு பிரிவு துறையினர் விசாரணை மேற்கொண்டனர். ஜாங் குய் வீட்டில் அதிகாரிகள் அதிரடி சோதனை செய்ததில் கீழ் தளத்தில் உள்ள ஒரு ரகசிய அறையில் குவித்து வைக்கப்பட்ட 300 மில்லியன் பவுண்ட் மதிப்புடைய 13 டன் எடை கொண்ட தங்க கட்டிகள், மற்றும் நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் 30 பில்லியன் பவுண்ட் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள், சீன யுவான் மற்றும் ஐரோப்பிய யூரோ என கட்டுகட்டாக பணமும் சிக்கியது. இது தொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில், ஜாங் குய் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Discussion about this post