நெல்லை முன்னாள் திமுக மேயர் மற்றும் அவரது கணவர் உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினர் கொலை நடந்த வீட்டுக்கு சென்று ஆய்வு செய்தனர். விசாரணை அதிகாரியான தென்மண்டல காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் கொலை நடந்த இடங்கள் மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள கார்த்திகேயனை கொலை நடத்த இடங்களில் வைத்து விசாரணை நடத்தினர். சுமார் அரைமணி நேரம் பல்வேறு இடங்களில் ஆய்வு நடைபெற்றது.
Discussion about this post