தமிழக முன்னாள் ஆளுநர் பீஷ்ம நாராயண் சிங் காலமானார்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பீஷ்ம நாராயன் சிங், முதுமை காரணமாக உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவரது மறைவிற்கு, பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த  1984  முதல் 1989 வரை அசாம் மாநில ஆளுநராக இருந்துள்ளார்.  1991ஆம் ஆண்டு தமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 3 ஆண்டுகள் தமிழகத்தின் ஆளுநராக இருந்தார். தமிழக ஆளுநராக இருந்த போது தமிழ்நாட்டில் நிலவி வந்த பதற்றமான அரசியல் சூழ்நிலை காரணமாக, மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தினார். கடந்த 1933ஆம் ஆண்டு, ஜூலை  13ஆம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தில் பிறந்த பீஷ்ம நாராயண் சிங், பீகார் மாநிலத்திற்கு கல்வித்துறை, உணவு வழங்கல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அமைச்சராக பதவி வகித்துள்ளார். கடந்த 1980ஆம் ஆண்டு இந்திராகாந்தி அமைச்சரவையில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை, குடியிருப்பு மற்றும் தொழிலாளர் நலத்துறைக்கான மத்திய அமைச்சராக பீஷ்ம நாராயண் சிங் பதவி வகித்துள்ளார்

Exit mobile version