மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியின் உடல் டெல்லியில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருண் ஜேட்லி நேற்றுக் காலமானார். இதையடுத்து அருண் ஜேட்லியின் உடலுக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து அருண் ஜேட்லி உடல் ஊர்வலமாக பாஜக தலைமை அலுவலகத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அங்கும் ஏராளமான அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அருண் ஜேட்லிக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அருண் ஜேட்லியின் உடல் தகனத்திற்காக ஊர்வலமாக வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது.
இறுதி ஊர்வலத்தில் ஏராளமான கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதையடுத்து, யமுனை ஆற்றங்கரையில் உள்ள நிகாம்போத்காட் மயானத்தில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அருண் ஜேட்லியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
Discussion about this post