கொடைக்கானலில் ஆற்று நிலத்தை ஆக்கிரமித்து கடைகளை கட்டி வரும் திமுக முன்னாள் வார்டு கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்குமாறு நகராட்சி அலுவலகத்தில் விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.
கொடைக்கானல் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள ஆற்று நீரை பயன்படுத்தி, குறிஞ்சி நகர், சர்வே நம்பர், எம்எம் தெரு ஆகிய பகுதிகளில் காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது.
கேரட் , பீன்ஸ் , முள்ளங்கி, டர்னிப் போன்ற காய்கறிகளை இந்த ஆற்றில் சுத்தம் செய்து பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பிவைக்கின்றனர்.
விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக உள்ள இந்த ஆற்றை ஆக்கிரமித்து, கடைகள் கட்ட திமுக முன்னாள் வார்டு கவுன்சிலர் மோகன் முயற்சி செய்கிறார் என்பது விவசாயிகளின் புகார்.
இதுகுறித்து கேட்டால் மோகன் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், ஆற்று நிலத்தை மீட்கக் கோரி, கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
திமுக முன்னாள் வார்டு கவுன்சிலர் மோகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Discussion about this post