இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர், சென்னையில் உள்ள இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மயிலாப்பூர் விஸ்வேஸ்வரபுரம் பகுதியில் வசித்து வந்த வி.பி.சந்திரசேகர், இந்திய கிரிக்கெட் அணிக்காக 1988 முதல் 1990ஆம் ஆண்டு வரை விளையாடியுள்ளார். மேலும் கிரிக்கெட் போட்டிகளின் வர்ணணையாளராகவும் பணியாற்றி உள்ளார்.
தமிழ்நாடு மற்றும் கோவா அணிக்காக, கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும், டிஎன்பிஎல் தொடரின் காஞ்சி வீரன்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளராகவும் இருந்தார்.
இந்தநிலையில், நேற்று தனது வீட்டில் சந்திரசேகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த வந்த காவல்துறையினர், உடலை மீட்டு ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் மறைவு தனக்கு வருத்தமளிப்பதாகவும், அவர்களுடைய குடும்பத்தினருக்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்வதாகவும் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.