காசோலை மோசடி வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. அன்பரசுவுக்கு கீழமை நீதிமன்றம் விதித்த 2 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் முன்னாள் எம்பி அன்பரசு, ராஜிவ்காந்தி கல்வி அறக்கட்டளை செலவுக்காக, 2002 ஆம் ஆண்டு பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா என்பவரிடம் 35 லட்சம் ரூபாயை கடனாக பெற்றிருந்தார். இந்த கடனை திருப்பி கொடுக்கும் வகையில் அன்பரசு அளித்த காசோலை, வங்கியில் பணமின்றி திரும்பி வந்ததால், முகுந்த் சந்த் போத்ரா வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம், அன்பரசு உள்ளிட்டோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை சென்னை அமர்வு நீதிமன்றமும் உறுதி செய்தது. இதை எதிர்த்து அன்பரசு உள்ளிட்ட இரண்டு பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி பி.என் பிரகாஷ், கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்தார். அன்பரசு மற்றும் மணி ஆகியோரை உடனடியாக சிறையில் அடைக்கும்படி அவர் உத்தரவிட்டார்.
Discussion about this post