ஆந்திர மாநில முன்னாள் சபாநாயகர் கோடல சிவபிரசாத் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில் சட்டப்பேரவை சபாநாயகராக இருந்தவர் கோடல சிவபிரசாத். தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவரான இவர் மீது, ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி அமைந்ததும், பல்வேறு வழக்குகள் பதியப்பட்டன. சட்டப்பேரவையில் இருந்த நாற்காலிகளை தனது வீட்டில் வைத்திருந்ததாக கோடல சிவபிரசாத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் குடும்ப உறுப்பினர்கள் ஜாமின் பெற்றுக்கொண்ட நிலையிலும், மிகுந்த மன உளைச்சலில் கோடல சிவபிரசாத் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தனது அறையில் தூக்கிட்டு அவர் தற்கொலைக்கு முயற்சித்தார். உயிருக்கு போராடிய நிலையில் அவரை மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே கொடல சிவபிரசாத் உயிரிழந்தார்.
Discussion about this post