வெளிநாடு சுற்றுப்பயணம் முடித்துக் கொண்டு சொந்த மாவட்டமான சேலத்திற்கு வருகை புரிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, சங்ககிரியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அரசுமுறை பயணமாக வெளிநாடுகளுக்குச் சென்று தாயகம் திரும்பிய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரது சொந்த மாவட்டமான சேலத்திற்கு வருகை புரிந்தார். சங்ககிரியில் மாவட்ட ஆட்சியர் ராமன், மாவட்ட எஸ்பி தீபா கணிகர் உள்ளிட்ட அதிகாரிகளும், சட்டமன்ற உறுப்பினர் ராஜா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, வைகுந்தம் சுங்கசாவடி அருகே மகுடஞ்சாவடியில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், பூரண கும்ப மரியாதை அளித்து முதலமைச்சரை வரவேற்றனர். அவர்களது வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பெண்களை மழையில் நனையாமல் பாதுகாப்பாக வீடு திரும்பும்படி கேட்டுக்கொண்டார்.
Discussion about this post