அமெரிக்க, வட கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பாரடைஸ் அருகே கடந்த 8-ஆம் தேதி வியாழக்கிழமை அதிகாலை, காட்டுத் தீ ஏற்பட்டு வேகமாக பரவியது. தீ மேலும் பரவுவதை தொடர்ந்து அங்குள்ள மக்கள் பாதுகாப்பன இடங்களுக்கு வெளியேறிக்கொண்டு இருக்கிறார்கள்.
அமெரிக்கா வட கலிபோர்னியாவின் மாகாணத்தில் உள்ள காட்டு பகுதியில் அடிக்கடி காட்டி தீ பரவி சுற்றி உள்ள இடங்களை முழுவதுமாக தீக்கிரையாக்கும். கடந்த ஒரு வருடமாக அங்கு மழை குறைவாக பெய்ததாலும், வறண்ட வெப்ப நிலை காரணத்தாலும் காட்டு தீ ஏற்பட்டு பல ஏக்கர் காடுகளையும், நகர்புறத்தையும் தீக்கிரையாக்கி வருகின்றது.
காட்டுத் தீ மேலும் அதிகமாக பரவிவருவதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகிறார்கள், தீயில் சீக்கி பாரடைஸ் நகரில் உள்ள மருத்துவமனை எரிந்து சாம்பலானது. அங்குள்ள நோயாளிகளை ஹெலிகாப்டர்கள் உதவியுடன் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றபட்டுவிட்டதால் பெரும் உயிர் சேதம் தடுக்கப்பட்டது.
காற்று பலமாக வீசுவதால் தீயணைப்பு வீரர்களால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். இந் நிலையில் ஒன்பது பேர் தீயில் பலியாகி உள்ளார்கள் என தெரியவந்துள்ளது. இந்த காட்டுத் தீ பாரடைஸ் நகரைத் தொடர்ந்து அடுத்து சிகோ நகரை நோக்கி பரவி வருகிறது எனவே அங்குள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Discussion about this post