இன்றைய காலகட்டத்தில் நாம் வாழும் புவியானது காலநிலை மாற்றம், காடுகள் அழிப்பு போன்றவற்றினால் வெப்பமயமாதலுக்குள் செல்கிறது. இதனை சரிபடுத்தி மாற்றியமைப்பதற்கு வன சான்றளிப்பு என்கிற முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. க்ளாஸ்கோவில் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற காலநிலை மாநாட்டில் 100 நாடுகள் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டு, 2030 க்குள் காடுகள் அழிப்பதை குறைக்கிறோம் என்று சொல்லியிருக்கின்றனர்.
அப்படியென்றால் வன சான்றளிப்பு என்றால் என்ன?
காட்டில் உள்ள மரங்களினால் கார்பன் டை ஆக்சைடு உட்கிரகித்து புவி வெப்பமாதல் ஓரளவு தடுக்கிறது. இவற்றை அழிப்பதன் மூலம் புவியின் வெப்ப அளவு அதிகரிக்கிறது. சில நாடுகள் மரங்களை வேண்டுமென்றே வெட்டுகின்றன. அதற்கு காரணம் காடுகள் ஒரு பொருளாதார கிடங்கு. மரங்கள் மூலம் கிடைக்கும் பொருட்களை வைத்து வாணிப சந்தையில் நல்ல லாபம் பார்க்கலாம். அதனால் சிலர் சட்டத்திற்கு புறம்பாக மரங்களை வெட்டுவதைத் தடுப்பதற்காக வன சான்றளிப்பு முறை கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் காட்டிலிருந்து மரங்களை வெட்டினால் அதற்கான சரியான ஆவணங்களை சமர்ப்பித்திருக்க வேண்டும். மேலும் ஒரு நாட்டின் அரசு சொல்கிற குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே மரத்தினை வெட்ட வேண்டும்.
இந்தியாவைப் பொறுத்தவரை இந்த வன சான்றளிப்பு உத்தரபிரதேசத்தில் கையாளப்பட்டுவருகிறது. மேலும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்பவைகள் எல்லாம் மரக் கட்டைகள் மட்டும்தான். மாறாக மரத்தினை வெட்டி துண்டுகளை நாம் ஏற்றுமதி செய்வதில்லை. ஓராண்டிற்கு 5 மில்லியன் மரக்கட்டைகள் உற்பத்தியாகிறது. அதில் 10% ஏற்றுமதியாகின்றன. இறக்குமதி செய்யப்படும் மரத்துண்டுகளின் ஓராண்டிற்கான செலாவணி 50,000 முதல் 60,000 கோடி ரூபாயாகும்.
Discussion about this post