பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு நீர்வீழ்ச்சிக்கு உள்ளுர் மற்றும் வெளி மாநிலங்களிகலிருந்து, விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். கோடை காலத்தில் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக, நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. மூன்று மாதங்கள் கழித்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்து வருவதால், கடந்த வாரம் குரங்கு நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது வால்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரவலான மழை பெய்து வருவதையடுத்து, குரங்கு நீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால், சுற்றுலாப் பயணிகள் நீர் வீழ்ச்சிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
Discussion about this post