மருத்துவ விசா இல்லாமல் வெளிநாட்டினர் இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டவர்கள் மருத்துவ விசா பெறாமல் மருத்துவ ஆலோசனை அல்லது சிகிச்சை மட்டும் தேவை என்ற பட்சத்தில் நாட்டில் எங்கும் சிகிச்சை பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மட்டும் பெற இயலாது என்றும் ஏற்கனவே நோயால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்கள், முதன்மை விசாவின் மூலம் இந்தியாவில் எந்தவொரு மருத்துவமனையும் அணுகி சிகிச்சைப் பெற்றுக்கொள்ளலாம் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
வெளிநாட்டவர்கள் இந்தியாவில் தங்கியிருக்கும் காலங்களில் மருத்துவ சிகிச்சை பெறுவதில் ஏற்பட்ட சிரமங்களை கருத்தில் கொண்டு இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
Discussion about this post