தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் நடைபெற்று கொண்டிருக்கும் 52வது ஆசியான் கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர்
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்தின் வெளியுறவு அமைச்சர்களின் 52 வது ஆசியான் வெளியுறவு கூட்டம் நடைபெற்றது. இதில் தாய்லாந்தின் வெளியுறவு துறை அமைச்சர் டான் பிரமுத்வினாய் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது நாங்கள் எவ்வாறு மேலும் பலப்பட வேண்டும் என்பதை அமைச்சர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம் என்றும், இது ஆசியான் சமூகத்திற்கு நிலையான முன்னேற்றமாக இருக்கும் என குறிப்பிட்டார். மேலும் கூட்டாண்மை மற்றும் ஆசியான் மைய பிராந்திய கூட்டமைப்பை வலுப்படுத்துதல், பிராந்திய சவால்களை மிகவும் திறம்பட எதிர்கொண்டு அதை பயன்படுத்தி கொள்ளுங்கள் என தெரிவித்தார். இதற்கு முன்னதாக பிரமுத்வினாயினுடன் கைகுலுக்கி வெளியுறவு துறை அமைச்சர்கள் புகைப்படம் எடுத்து கொண்டனர். இந்த ஆசியான் கூட்டம் வரும் ஆகஸ்ட் 3ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 30க்கும் மேற்பட்ட பிரதி நிதிகள் கலந்து கொள்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதில் அமெரிக்கா- வடகொரியா பிரச்சனைகள் மற்றும் தென்சீனக்கடல் மோதல்கள் தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post