ஆசிய கண்டத்தில் தொடர்பு மற்றும் நம்பிக்கையை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்கான 5-வது மாநாட்டில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார்.
ஆசிய கண்டத்தில் தொடர்பு மற்றும் நம்பிக்கையை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்கான கூட்டமைப்பின் சார்பில் அதன் 5-வது மாநாடு தஜிகிஸ்தான் தலைநகர் டுஷன்பே நகரில் நடைபெற்றது. இதில் சீனா, ஈரான், இஸ்ரேல் உள்ளிட்ட 27 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் பங்கேற்ற மத்திய வெளியுறத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தஜிகிஸ்தான் அதிபர் ஏமோமாலி ரஹ்மோன் வரவேற்றார்.
இதனையடுத்து ஆசியாவில் அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவது குறித்து உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் ஆலோசனை நடத்தினர்.