கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பலர் இந்திய பங்குகளை விற்க தொடங்கியதால், மார்ச் காலாண்டில் மட்டும் 48 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்திய பங்குகள் விற்கப்பட்டுள்ளன. கடந்த டிசம்பர் 2019 வரையிலான மூன்று மாதத்தில், 6 புள்ளி 3 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்திய பங்குகளை,வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வாங்கினர். அதே போல் இந்த ஆண்டு ஜனவரியில் 1 புள்ளி 71 பில்லியன் டாலர் இந்திய பங்குகளையும், பிப்ரவரியில் 265 மில்லியன் இந்திய பங்குகளையும் வாங்கியிருந்தனர். இதையடுத்து கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இந்திய பங்குகளை விற்க தொடங்கினர். கொரொனா வைரஸ் பரவல் காரணமாக உலகளவில் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றங்களால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள், அச்சமடைய தொடங்கினர். இதனால், இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் பங்கு சந்தைகளில் இருந்து வெளியேறுகின்றனர். கொரோனா பரவல் குறித்து தகவல்களை உன்னிப்பாக கவனித்து வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், கொரோனா தாக்கம் குறைய தொடங்கும் போது மீண்டும் இந்திய பங்குகளில் முதலீடு செய்ய தொடங்குவார்கள் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Discussion about this post