வெளிநாட்டு கல்வி சுற்றுலா செல்ல வாய்ப்பளித்த தமிழக அரசுக்கும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து அறிவியல் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களை வெளிநாடு கல்விச் சுற்றுலா பயணத்துக்கு அனுப்பும் திட்டத்தை தொடங்கியுள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டம் கம்பளியும் பட்டியைச் சேர்ந்த மாணவர் சவுந்திரராஜன் மற்றும் காட்டுப்பட்டியைச் சேர்ந்த மாணவர் கனகவேல் ஆகியோர் வெளிநாட்டுக்கு கல்விச் சுற்றுலா சென்று திரும்பியுள்ளனர். கல்வி சுற்றுலா மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக கூறும் மாணவர்கள், வானில் பறக்கும் விமானத்தை மட்டுமே இதுவரை வேடிக்கை பார்த்துவந்த நிலையில், அதில் பயணித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த வாய்ப்பை வழங்கியதற்காக தமிழக அரசு மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.
Discussion about this post