அன்னிய செலாவணி 91 கோடி டாலர் சரிவு

இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் , அந்நிய செலாவணி கையிருப்பில் தொடர்ந்து சில வாரங்களாகவே ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் 5 ஆம் தேதியுடன் நிறைவடைந்த அந்நிய செலாவணி கையிருப்பு 91 கோடி டாலர் குறைந்து 39 ஆயிரத்து 961 கோடி டாலராக உள்ளது. மேலும் இதற்கு முந்தைய வாரத்தில் செலாவணி கையிருப்பு 126 கோடி டாலராக சரிந்து குறைந்து 40 ஆயிரத்து 502 கோடி டாலராக காணப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து அந்நிய செலாவணியின் கையிருப்பில் சரிவு நிலையே காணப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version