இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் வலம் வரும் ஆஸ்திரேலிய பறவைகளை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு களித்து வருகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டம், காஞ்சிரங்குடி உள்ளிட்ட பகுதிகளில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளன. இங்கு பிளமிங்கோ, ரஷ்ய நீர் வாத்து, அரிவாள் மூக்கன், பாம்பு தாரா என 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவைகள், சரணாலயத்திற்கு வந்து டிசம்பர் முதல் மார்ச் வரை கூடுகட்டி இனப்பெருக்கம் செய்து, பின் ஏப்ரல், மே மாதங்களில் தங்கள் குஞ்சுகளுடன் தாயகம் திரும்பி செல்வது வழக்கம். அந்த வகையில், தனுஷ்கோடி கடற்கரை பகுதிகளுக்கு பிளமிங்கோ பறவைகள் வரத் தொடங்கியுள்ளன. இதனை அங்கு வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடனும், ஆச்சரியத்துடனும் கண்டு களித்து வருகின்றனர். இந்த ஆண்டு பருவமழை அதிக அளவில் பெய்ததால், ஏராளமான பறவைகள் தனுஷ்கோடி சரணாலயத்திற்கு வருகை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post