கொரோனா அச்சுறுத்தலைத் தொடர்ந்து உள்நாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக விமான போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து விமான போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை காரணமாக நாளை இரவு 12 மணி முதல் உள்நாட்டு விமான சேவைகள் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சரக்கு விமானங்கள் மட்டும் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வரும் 31 ஆம் தேதி வரை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே சர்வதேச விமானங்கள் ரத்துசெய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post