ஆண்-பெண் பாலின சமத்துவம் அமெரிக்காவிலும் பாராட்டும்படியாக இல்லை என நிரூபித்திருக்கிறது ஒரு சம்பவம்.. அது பற்றிய தகவல்கள்
அமெரிக்காவின் தலைசிறந்த பத்திரிகையான `ஃபோர்ப்ஸ்’ ஒவ்வோர் ஆண்டும் உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். இந்த வருடமும் உலகின் மிகச்சிறந்த மற்றும் புதுமையான தொழில் செய்யும் நூறுபேரின் பட்டியலை அவர்களின் புகைப்படத்துடன் கடந்தவாரம் வெளியிட்டது.
அதில் 75 வது இடத்தில் ஒரு பெண் இடம்பெற்றிருந்தார். ஆனால் அவரின் புகைப்படம் இடம் பெறவில்லை .. 100 பேர் கொண்ட பட்டியலில் ஒரே ஒரு பெண் தானா உங்கள் கண்ணுக்கு தெரிந்தார் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்..
அதே நேரத்தில் அவரது புகைப்படத்தை வெளியிடாதது ஏன் என பலரும் போர்ப்ஸை வறுத்தெடுத்து வருகிறார்கள்…
அந்த வகையில் முன்னாள் அதிபர் ஒபாமாவின் மூத்த ஆலோசகர் வேலரி ஜாரெட்டின் டூவிட்டர் பதிவு இன்னும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது. “தலைசிறந்த நூறு புதுமையான தொழிலதிபர்களைத் தேர்வு செய்ததில் ஒரு இடத்தை மட்டுமே பெண்களுக்காகக் கொடுத்திருக்கிறீர்கள். உங்களுடைய இந்த அறிக்கை 99 ஆண்களுக்கான வெற்றியில்லை. பல லட்சம் பெண்களுக்கான சவால் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையும் மன்னிப்பு கேட்டுள்ளது.. பிழைகளை திருத்தி மறு பட்டியல் வெளியிடுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
Discussion about this post