பெண்களுக்கும் வாக்குரிமை சுதந்திரம் வேண்டும் என போராடி வெற்றிகொண்ட தினம் இன்று..
பழங்காலத்தில் பெண்களுக்கு எந்த ஒரு சுதந்திரமும் இல்லாமல் வீட்டுகுள்ளையே முழங்கி இருந்தனர்,அவர்களின் உரிமைக்காக பல்வேறு தலைவர்களும் போராட்டத்தில் இடுபட்டு பெண் விடுதலைக்காக பாடுபட்டனர்.வாக்குரிமை என்பது மிகவும் முக்கியமான ஒன்று ஆனால் அந்த காலத்தில் பெண்கள் வாக்களிக்க தடை விதிக்கப்பட்டு வந்தன,இந்த தடைகளை தகர்த்து பெண்களும் வாக்களிக்க வேண்டும் , பெண்களுக்கும் வாக்குரிமை சுதந்திரம் வேண்டும் என போராடிய முதல் பெண்மணி கேட் ஷெப்பர்டு ஆவார், நியூசிலாந்தை சேர்ந்த கேட் ஷெப்பர்டு 1893 ஆம் ஆண்டு பெண்கள் வாக்குரிமைக்காக முதலில் குரல் எழுப்பிய பெண் ஆவர். அவர் அன்று குறல் எழுப்பவில்லை என்றால் இன்று பெண் வாக்குரிமை என்று ஒன்று இருந்திரிக்க வாய்ப்பு இல்லை.
பிரான்ஸ், ஸ்வீடன் நாட்டிலும் பெண் வாக்குரிமைக்காக பெண்கள் குரல் எழுப்பினர்,இதனை தொடர்ந்து 1756-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஒரு சிறுபகுதியான மாஸசூட்ஸில் நடைபெற்ற உள்ளூர்ப் பஞ்சாயத்துத் தேர்தலில் பெண்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றனர். ஆனாலும், அவர்களுக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதாவது, வாக்களிக்கும் பெண் திருமணமாகாதவராகவும், தன் பெயரில் சொத்துகள் உடையவராகவும் இருக்கவேண்டும் என்பதே அதன் நிபந்தனை.
பெண்களுக்குக் கட்டாயம் வாக்குரிமை அளிக்க வேண்டும் என்பதை மற்ற நாடுகளைவிட நியூசிலாந்து நாட்டினர் பல ஆண்டுகளாகவே வலுயுறுத்தி வந்தனர். குறிப்பாக, கேட் ஷெப்பர்டு என்ற பெண்மணி, உலக நாடுகளில் பெண்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தப்படுவதைக் கண்டு வேதனை அடைந்தார்.இவரின் தொடர் போராட்டம் வெற்றியும் அடைந்தது.
இதையடுத்து, பெண்களுக்கு முதன்முதலில் வாக்குரிமை தந்த நாடு நியூசிலாந்து என வரலாற்றில் இடம்பிடித்தது. 1893-ம் ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி இதற்கான சட்டம் இயற்றப்பட்டது. அதே ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் பெண்கள் வாக்களிக்கவும் தொடங்கினர்.இவரின் வெற்றி நாளான இன்று நமது வாக்குரிமைக்காக பாடுபட்ட கேட் ஷெப்பர்டு நாமும் வாழ்த்துவோம்…
Discussion about this post