சூரியக் குடும்பத்திற்கு அப்பால் பூமியைப் போன்ற ஒரு கோளின் வளிமண்டலத்தில் நீராவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சூரிய குடும்பத்திற்கு வெளியே இதுவரை 4 ஆயிரத்து 109 கோள்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான கோள்களில் வளிமண்டலம் இருந்தாலும், அவை அடிப்படையில் வாயு உருண்டைகளாக உள்ளன.
பல கோள்களில் பாறைகளுடன் கூடிய நிலத்தரை இருந்தாலும், அவற்றில் வளிமண்டலம் இல்லை. இந்நிலையில், பூமியைப் போல 8 மடங்கு நிறையும் இரு மடங்கு பெரியதுமான K2-18B என்ற கோள் விஞ்ஞானிகள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
சூரிய மண்டலத்தில் இருந்து 110 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள, நட்சத்திரத்தை K2-18B சுற்றி வருகிறது. இந்த K2-18B கோள், பூமியோடு ஒப்பிடத்தக்க வகையில் உள்ளது.
பூமியைப் போலவே உயிர் வாழ்வதற்கு சாத்தியமான பூமியைப் போன்ற தட்பவெப்ப நிலையுடன் கூடிய ஒரு கோளின் வளிமண்டலத்தில் முதல் முறையாக நீராவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post