தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளதாகத் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் நடைபெற்ற நன்மைதருவார் கோவில் விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அப்போது பேசிய அவர், பள்ளியில் மாணவ, மாணவிகள் முதலிடம் பிடித்தால் எப்படி உடனடியாக அறிவிப்பார்களோ, அதேபோல் தமிழக அரசின் செயல்பாடுகளைக் கொண்டு, சிறந்து நிர்வாகமாக அங்கீகரித்து மத்திய அரசு தமிழகத்திற்கு முதலிடம் அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.
Discussion about this post