ஆசியாவிலேயே முதல் முறையாக மாணவிகள் தயாரித்த செயற்கை கோளுக்கு மணியம்மையார் சாட் என பெயரிடப்பட்டு வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.
தஞ்சை வல்லம் அருகே உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் பல்வேறு பிரிவுகளில் பயிலும் 15 மாணவிகள் இணைந்து SKI, NSLV 9, மணியம்மையார் chat என்ற செயற்கைக் கோளை தயாரித்துள்ளனர். இந்த செயற்கைகோள் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வளாகத்தில் திறந்த வெளி மைதானத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. சிறப்பு விருந்தினராக இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆசியாவிலேயே முதல் முறையாக மாணவிகளால் தயாரிக்கப்பட்ட இந்த செயற்கை கோளுக்கு, மணியம்மையாரின் நூற்றாண்டு விழாவில் பெருமை சேர்க்கும் வகையில் மணியம்மையார் சாட் என பெயர் சூட்டியுள்ளனர். இந்த செயற்கை கோள் வளிமண்டலத்தின் வெப்பநிலை, ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய உள்ளது.
Discussion about this post