திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை தூத்துக்குடி தொகுதி வாக்காளர் தொடர்ந்து நடத்த அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மக்களவை தொகுதி எம்.பி.கனிமொழியின் வெற்றியை எதிர்த்து, அத்தொகுதியில் போட்டியிட்ட பாரதிய ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்த போது, தெலுங்கானா மாநில ஆளுனராக நியமிக்கபட்டதால், தேர்தல் வழக்கை திரும்ப பெற அனுமதி கோரி தமிழிசை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழிசை தொடர்ந்த வழக்கை, தொடர்ந்து நடத்தக்கோரி தொகுதி வாக்காளரான முத்துராமலிங்கம் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கை தொடர்ந்து நடத்த முத்துராமலிங்கத்திற்கு உரிமை உள்ளதாக கூறி, தேர்தல் வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டது.
Discussion about this post